வாயில் கவ்வி வைத்திருந்த மீன் தொண்டைக்குள் புகுந்ததால் இளைஞர் பலி..!

கேரளாவின் ஆலப்புழா அருகே காயங்குளம் புதுப்பள்ளியைச் சேர்ந்தவர் ஆதர்ஷ், 24. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் சிலருடன் அப்பகுதியில் உள்ள குளத்தில் துாண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது கிடைத்த ஒரு மீனை வாயில் கவ்வி வைத்திருந்தார்.
திடீரென்று மீன் துடித்து, அவரது தொண்டைக்குள் சென்றது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு துடித்த ஆதர்ஷை அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் நண்பர்கள் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஆதர்ஷ் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.