1. Home
  2. தமிழ்நாடு

நடுவானில் ஆடைகளை கழற்றி இளம் பெண் அட்டகாசம்!

1

விமானத்தில் பயணம் செய்வதற்காக ஏறிய இளம்பெண் ஒருவர் உடனே தன்னை  இறக்கி விடுமாறு கூறியுள்ளார். ஆனால் விமானம் கிளம்பி விட்டதால் இறக்கி விட முடியாது என விமான ஊழியர்கள் கூறிவிட்டனர்.  

கோபமடைந்த இளம்பெண் திடீரென தனது ஆடைகளை கழற்றி சத்தம் போட ஆரம்பித்தார். விமான பணிப்பெண்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.ஆனால் எதையும் கேட்காமல் அந்த பெண் தனது ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்றுவிட்டார்.  வேகமாக நடந்து சென்ற இளம்பெண்   விமான காக்பிட் கதவையும் அந்த பெண் வேகமாக தட்டியுள்ளார். 

விமானத்தில் குழந்தைகளும் இருந்ததால் பெண்ணின் செயல் மற்ற பயணிகளை முகம் சுளிக்க வைத்தது. இதனால் பைலட் விமானத்தை மீண்டும் விமான நிலைய கேட்டிற்கு திருப்பி விட்டார். விமானம் தரையரங்கியதும் போலீசார் இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அதன் பிறகு மீண்டும் விமானம் புறப்பட்டு சென்றது.


 

Trending News

Latest News

You May Like