1. Home
  2. தமிழ்நாடு

பதற்றத்தில் காரின் ஆக்ஸிலரேட்டரை அழுத்திய இளம்பெண்..300 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்..!

1

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் இருந்து சுலிபஞ்சன் மலைப்பகுதிக்கு நேற்று, ஸ்வேதா தீபக் சர்வாஸ் (23) என்ற இளம்பெண், தனது நண்பரான சூரஜ் சஞ்சாவுடன் (25) பயணம் சென்றுள்ளார்.

அங்கு நேற்று மதியம், மலைப்பகுதியில் இவர்கள் சென்ற காரை திருப்புவதற்காக இளம்பெண் ஸ்வேதா, பின்னோக்கி இயக்கியுள்ளார். அதனை வெளியே நின்றவாறு சூரஜ் சஞ்சாவ், தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஸ்வேதா இயக்கிய கார் பள்ளத்தாக்கின் விளம்புக்கு செல்வதை அறிந்த சூரஜ் காரை நிறுத்துமாறும் எனவும் கத்துகிறார்.ஆனால், பதற்றத்தில் காரின் ஆக்ஸிலரேட்டரை அழுத்திய ஸ்வேதா, காருடன் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்தார். இந்த சம்பவத்தில் ஸ்வேதா தாஸ் உயிரிழந்தார். 

இது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி, காண்போரை பெரும் அதிர்ச்சி அடையச் செய்கிறது.



 

Trending News

Latest News

You May Like