யூடியூபை நம்பியதால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்..!

கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது ஸ்ரீ நந்தா உடல் எடையைக் குறைப்பதற்காக அவர் முயற்சி செய்துள்ளார்.மருத்துவர் ஆலோசனை பெறாமல், யூடியூப் வீடியோக்களை நம்பி, கடுமையான டயட் திட்டத்தைத் தொடர்ந்து 6 மாதங்களாகப் பின்பற்றியுள்ளார்.
கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து பின்பற்றி வந்த நிலையில், ஸ்ரீ நந்தா திடீரென உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். உடனடியாக அவரது பெற்றோர், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றார்.மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இறுதியில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மருத்துவர்கள் தெரிவித்ததாவது, குறைந்த அளவு உணவை மட்டுமே சாப்பிட்டு கடுமையான டயட் பின்பற்றியதனால், குடல் சுருங்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர் மேலும் யூடியூப் வீடியோக்களை பார்த்து உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.