1. Home
  2. தமிழ்நாடு

அந்தரங்க உறுப்பை தோசை கரண்டியால் தாக்கிய இளம்பெண்!

1

மும்பையை அடுத்த பிவண்டி பகுதியில் 26 வயதுமிக்க இளம்பெண் வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அனில் சத்தியநாராயணன். இந்த நிலையில், சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வாலிபர் மதுபோதையில் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் வாலிபரிடம் தப்பிக்க சமையல் அறைக்கு ஓடினார். அங்கும் பெண்ணை துரத்தி சென்ற வாலிபர் தனது அந்தரங்க உறுப்பை காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டார். அப்போது ஆவேசமடைந்த பெண் சமையல் அறையில் இருந்த தோசை கரண்டியை எடுத்து வாலிபரின் அந்தரங்க உறுப்பில் தாக்கினார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

வலி தாங்க முடியாமல் அலறி துடித்த வாலிபர், ஓட்டம் பிடித்து மருத்துவமனைக்கு சென்றார். அங்கு வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like