1. Home
  2. தமிழ்நாடு

உணவு இயந்திரத்தில் சிக்கி இளம்பெண் பரிதாப பலி..!

1

உஜ்ஜயினியில் மகாகாலேஷ்வர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சத்துணவு கூடத்தில் பக்தர்களுக்கு உணவு பரிமாறப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை கோவிலில் உள்ள கேன்டீனில் வேலை செய்து கொண்டிருந்த ரஜ்னி காத்ரி (வயது 30) என்ற பெண்ணின் துப்பட்டா உருளைக்கிழங்கு உரிக்கும் இயந்திரத்தில் சிக்கியது.

இதில் துப்பட்டா கழுத்தில் சுற்றியதால் உயிருக்கு போராடிய நிலையில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த சக ஊழியர்கள் உடனடியாக இயந்திரத்தை நிறுத்தி, அந்த இயந்திரத்தில் இருந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் பணிபுரிந்த கேன்டீனில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like