கொரோன சிகிச்சை மையத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் - உதவியாளர் கொடூரம் !

இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்கள் பட்டியலில் மாகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அங்குள்ள தானே, மிரா சாலையில் கொரோனா தனிமைப்படுத்துதல் மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு பெண்கள், சிறுமிகள் ஏராளமானோர் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியாக மருத்துவர்கள், நர்ஸ், மருத்துவ உதவியாளர்கள் என பலரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை கவனித்துக்கொள்ள அந்த சிறுமியின் உறவுக்காரப் பெண்(20) மற்றும் அவரது 10 வயது மகளும் தங்கியிருந்தார்.
அப்போது கொரோனா மையத்தில் உதவியாளராக இருந்த நபர், கொரோனா பாதித்த சிறுமிக்கு உதவியாக இருந்த உறவுக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரது மகளை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன அப்பெண்ணை கொரோனா மையத்தில் வைத்தே உதவியாளர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே கூறக்கூடாது எனவும் மிரட்டியுள்ளான். இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது அந்த பெண் குடும்ப உறுப்பினர்களிடம் நடந்த கொடூரம் குறித்து தெரிவித்தார். பின்னர் அவர்கள் அறிவுறுத்தல் பேரில் அப்ணெண் புகார் அளித்ததைத்தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனையடுத்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் மீது ஐபிசி 376 பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in