கேட்கும் போதே கண்ணு கலங்குது...போலீஸ் கஸ்டடியில் அஜித் அனுபவித்த கொடுமைகள்!
அஜித் குமாரின் உறவினர் அளித்துள்ள பேட்டி பதற வைக்கிறது.
'' மடப்புரம் கோயிலுக்கு பின்னாடி இருக்க கோசாலை மடத்தில தான் அஜித்தை போலீசார் அடிச்சி விசாரிச்சிட்டு இருந்தாங்க. அதை பார்த்ததும் நான் அங்க போனேன்.. அப்போது என்னை யார்? என்று போலீஸ் விசாரிச்சது. அஜித்தோட அண்ணன்தான் சார் நானு, அவன் என்ன பண்ணானு கேட்டேன். உடனே அந்த போலீசார் அஜித்தை அடிக்க போனப்போ, கைய தூக்க முடியாம தூக்கி ''அடிக்காதீங்க சார்'' என மெல்லிய குரலில் கத்தினான். நான் அஜித் பக்கத்துல போனப்போ கஞ்சா வாடை அடிச்சது. ஆனா அவனுக்கு எந்த போதை பழக்கமும் இல்ல. எனக்கு ஒண்ணுமே புரியல, அப்போ ராஜா என்ற காவலர், '' என்னோட விசாரணை எப்படி இருக்கும் தெரியுமா? கஞ்சா எடுத்துட்டு வாங்க'' என்றார்.
அப்போதுதான் எனக்கு புரிஞ்சது, இவங்களே அஜித்துக்கு கஞ்சா கொடுத்து மயக்கமாக்கி அடித்து விசாரிக்கிறாங்கன்னு. அது மட்டுமல்ல, தண்ணில மிளகா பொடியை கலந்து குடிக்க கொடுத்தாங்க.. அவனது பிறப்புறுப்பிலும் மிளகா பொடியை தூவினாங்க.. உடல்ல வேர்த்த இடத்துல எல்லாம் மிளகா பொடியை அப்பினாங்க... 'தண்ணி தண்ணினு ...' அவன் கதறுனான். கொஞ்சம் தண்ணியாவது கொடுங்க சார்னு நான் கேட்டேன். கொஞ்சம் நேரம் கழிச்சு அஜித்தோட கைய புடிச்சி நாடி பார்த்தேன்.. எந்த துடிப்பும் இல்லாம இருந்துச்சி. உடல்ல அசைவு நின்னு போயி மலம் வெளியேறி இருந்துச்சி. அந்த வாடையை என்னால உணர முடிஞ்சது. அதுக்கு அப்புறம் போலீஸ் ஒரு ஆட்டோவை புடிச்சி அஜித்தை அரசு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு போனாங்க...'' என மனோஜ் பாபு உருக்கமாக கூறினார்.
அஜித் குமாரின் சட்டவிரோத கஸ்டடி மரணம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை உண்டாக்கிய நிலையில், மனோஜ் பாபுவின் இந்த பேட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.