1. Home
  2. தமிழ்நாடு

இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!!

Q

முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கும், இந்திய அணி 153 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் பும்ரா 6 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் மார்க்ரம் 106, கேப்டன் எல்கர் 12 ரன்களை எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

79 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய இந்திய அணி 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்தியா தரப்பில் ஜெய்ஷ்வால் 28, ரோஹித் ஷர்மா 17* விராட் கோலி 12 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1 -1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

 

Trending News

Latest News

You May Like