1. Home
  2. தமிழ்நாடு

இந்திய அணி அபார வெற்றி..!

1

டி20 உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும்  நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மோதியது.

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது . இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

மேற்கு இந்தியத் தீவுகளின் கயானாவில் நடைபெற்ற இந்த போட்டியில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் சால்ட் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.

அர்ஷ்தீப் வீசிய மூன்றாவது ஓவரில் மூன்று பவுண்டரிகளை விளாசினார் பட்லர். அடுத்த ஓவரில் அக்சர் படேலை பந்து வீச பணித்தார் ரோகித் சர்மா. அந்த ஓவரின் முதல் பந்தில் ஸ்ட்ரைக்கில் இருந்த பட்லர், பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று அதனை மிஸ் டைம் செய்தார். அது டாப் எட்ஜ் ஆக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கேட்ச் பிடித்தார். பட்லர் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் குல்தீப். அக்சர் 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். லிவிங்ஸ்டன் மற்றும் ரஷித் ரன் அவுட் செய்யப்பட்டனர். ஆர்ச்சர் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.

16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. இதன் மூலம் சனிக்கிழமை (ஜூன் 29) அன்று தென் ஆப்பிரிக்க அணியுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை மேற்கொள்கிறது இந்தியா. 

 

Trending News

Latest News

You May Like