கண்களை கட்டிக்கொண்டு மனு வழங்க வந்த ஆசிரியர்கள்..!

கோவை மாவட்ட கலெக்டரிடம் கண்களை கட்டிக்கொண்டு மனு வழங்க வந்திருந்த சம்பவம் கவனம் பெற்றது.
15,000 இடைநிலை ஆசிரியர் (1-5 வகுப்புகள்) காலி பணியிடங்கள் நிரப்படவேண்டிய இடத்தில் அரசு 2,768 இடங்களை மட்டும் நிரப்ப உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து, இடைநிலை ஆசிரியர் பனி நியனமான தகுதி தேர்வில் தகுதி பெற்று, பணிக்காக பல ஆண்டுகள் காத்துவரும் ஆசிரியர்கள், காலியிடங்கள் அனைத்தையும் அரசு நிரப்பவேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் வெளியே கண்ணைக் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தற்போது வரை இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வில் 23,000க்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று உள்ளதாக தகவல் உள்ளது. ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவித்துள்ள 2,768 காலி பணியிடங்கள் என்பது 12 ஆண்டுகளாக பணி வாய்ப்பிற்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பெருத்த ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் கூறினர்.
2013 முதல் தற்போது வரை ஒரு காலி பணியிடங்களையும் நிரப்பாமல் 2013, 2017, 2018, 2022ஆம் ஆண்டு வரை தகுதி தேர்வு மட்டும் நான்கு முறை 18 தேர்வினை நடத்தி உள்ளதாக குறிப்பிட்ட அவர்கள், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நியமன தேர்வை நம்பி காத்திருந்த நிலையில், அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக கூறினர். காலியாக உள்ள அனைத்து இடங்களையும் தகுதி உடையவர்களை கொண்டு அரசு நிரப்பவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.