காலை சிற்றுண்டி திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் - ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை..!
தற்போது, தமிழ்நாடு தொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும், இ.எம்.ஐ.எஸ்., பயிற்சிகள், மாணவர்களின் நல திட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள், மாணவர் மன்றங்கள், புள்ளி விவரங்கள் தருதல் என பல்வேறு விதமான பணிகள் வழங்கப்படுகின்றன. இந்த பணிகளுக்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறப்பு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
இந்நிலையில், காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை கண்காணிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருக் கிறது. இதனால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும். காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.