1. Home
  2. தமிழ்நாடு

போலிச் சான்றிதழ் மூலம் 19 ஆண்டுகள் அரசுப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்!

போலிச் சான்றிதழ் மூலம் 19 ஆண்டுகள் அரசுப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்!


அரசு தொடக்கப்பள்ளியில் போலிசான்றிதழ் கொடுத்து 19 ஆண்டுகள் ஒருவர் ஆசிரியராக பணிபுரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் வெங்கட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணம்மாள் என்பவர் காரிமங்கலம் ஒன்றியம் திம்மராயனஹள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கண்ணாம்மாளின் 10 மற்றும் 12 வகுப்பு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. அதில் 12 ஆம் வகுப்பில் தனிதேர்வராக தேர்வு எழுதியுள்ளார். அதில் 4 பாடங்களில் தோல்வியடைந்துள்ளார்.தேர்வு எழுதாமல் போலியான சான்றிதழ் கொடுத்தது சான்றிதழ் சரிபார்ப்பில் தெரியவந்தது.

போலிச் சான்றிதழ் மூலம் 19 ஆண்டுகள் அரசுப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்!

இதனையடுத்து வட்டார கல்வி அலுவலர் உமாதேவி மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில், கண்ணம்மா மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கால்துறையினா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like