1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்களை சாதி பெயர் சொல்லி திட்டிய ஆசிரியை – அதிரடி நடவடிக்கை!!

மாணவர்களை சாதி பெயர் சொல்லி திட்டிய ஆசிரியை – அதிரடி நடவடிக்கை!!


திருப்பூரில் பள்ளி மாணவனர்களை ஜாதி பெயரை சொல்லி திட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய கீதா பள்ளியில் பயிலும் பட்டியல் இன மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து, சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் எழுந்தது.

மாணவிகளின் புகாரையடுத்து திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலர் ரமேஷ் இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அவரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் நடந்த நிகழ்வுகளை கூறினர்.

மாணவர்களை சாதி பெயர் சொல்லி திட்டிய ஆசிரியை – அதிரடி நடவடிக்கை!!

இதையடுத்து தலைமை ஆசிரியை கீதாவை அழைத்து மாணவிகள் முன்னிலையில் ரமேஷ் விசாரணை மேற்கொண்டார். மாணவிகளின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரியவந்ததையடுத்து கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். .

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணக்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் தலைமை ஆசிரியை கீதா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like