1. Home
  2. தமிழ்நாடு

ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சந்தித்த டிடிஎப் வாசன்..!

1

மதுரையை சேர்ந்தவர் வரிச்சியூர் செல்வம்.. வரிச்சியூர் என்பது அங்குள்ள ஒரு ஊர்.. பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் செல்வம்.. முன்னாள் திமுக நிர்வாகியும்கூட.

இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இப்போது ஏகப்பட்ட பிசினஸ்களை செய்து வருகிறார். இவரது உடம்பெல்லாம் தங்க நகை மின்னும்.. இதுதான் செல்வத்தின் டிரேட் மார்க்..

விஐபி தரிசனத்தில் உள்ளே சென்று இவர், அத்திவரதரை கும்பிட்டதுகூட சர்ச்சையானது.அதற்கு இவர் விளக்கம் சொல்லும்போது, "இவ்ளோ பெரிய பிரச்சனை வரும்னு எனக்கு தெரியாது. நான் வெச்சிருக்கிற கார் 1 கோடி ரூபாய்.. நான் ஒரு லேன்ட் ஓனர்.. என்கிட்ட 7 கார்கள் இருக்கு.

நான் விவிஐபி இல்லையா? நான் போட்டிருக்கிற நகை மொத்தம் 250 பவுன். இது போக, பைனான்ஸ் தனியா பண்றேன். வாரத்துல 3 நாள் வெளியூர், மீதி 4 நாள் சாயங்காலத்துல பேரன், பேத்திகளுடன் வாக்கிங் போவேன், ஷாப்பிங் காம்பிளக்ஸ் போவேன். சாப்பிடுவேன். எனக்கு ரோல் மாடல் யாருன்னு பார்த்தீங்கன்னா, இப்போ லண்டன்ல இருக்கார் இல்லே... ரூ.9 ஆயிரம் கோடி ஏமாத்திட்டு, அவர்தான் என் குருநாதர்.. அவர் இப்படித்தாங்க வாழ்றாரு" என்று கூறி மக்களை அதிர வைத்தவர் இந்த வரிச்சியூர் செல்வம்.

இந்த நிலையில் இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போதெல்லாம் நகைகளே இல்லாமல் இருந்தார். பிறகு அவருக்கு ஜாமீன் கிடைத்தவுடன் அவர் வெளியே வந்துவிட்டார். இந்த நிலையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன், செல்போனில் பேசிக் கொண்டே கார் ஓட்டியதாக மதுரை திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பிறகு தனக்கு ஷூட்டிங் இருப்பதால் தன்னை ஜாமீனில் விடுவிக்க மனுதாக்கல் செய்தார்.

இதையடுத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி அவர் தினமும் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட வேண்டும். இதற்காக அவர் நேற்றைய தினம் கையெழுத்திட வந்தார். அப்போது அவர் கையெழுத்திட்டுவிட்டு மதுரையில் வரிச்சியூர் செல்வத்தை சந்தித்து பேசினார்.இவர்கள் இருவரும் சந்தித்தது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like