டி.டி.எஃப் வாசனுக்கும் எனக்கும் கல்யாணமா ? அவர் எனக்கு அண்ணா போன்றவர்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் ஜெசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சங்கீதா.
இவருக்கும் பைக் சாகச யூடியூப் பிரபலம் டிடிஎப் வாசனுக்கும் கல்யாணம் என சமூக வலைதளங்களில் தகவல் பரப்ப தொடங்கியது. மேலும் இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் சங்கீதா தன்னுடைய காதலரின் பெயர் வி என்ற எழுத்தில் தொடங்கும் என தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில் சங்கீதா இந்த வதந்திக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தன்னுடைய காதலரின் பெயர் விக்னேஷ் என தெரிவித்துள்ளார். மேலும் டி டி எஃப் வாசன் தன்னுடைய சகோதரனின் நெருங்கிய நண்பர். எனக்கு அண்ணா போன்றவர் என விளக்கம் அளித்துள்ளார்.