1. Home
  2. தமிழ்நாடு

மார்ச் மாதத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் தவெக தலைவர்..!

Q

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், 2026ல் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையலாம். ஆனால் கூட்டணி தொடர்பான முடிவு அந்த நேரத்தில் தான் எடுக்கப்படும் என்று கூறி இருந்தார். இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா என்ற கேள்வி எழுந்தது.

 

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடனே கூட்டணி அமைப்போம். இதுவரை 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

 

கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டம். அதன்பின் தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மார்ச் முதல் வாரத்தில் தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் செய்வதற்கான பணிகளை அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதற்கான தரவுகள் மற்றும் திட்டமிடல்களை ஆதவ் அர்ஜுனா மேற்கொண்டு வருவதாகவும், இந்த சுற்றுப்பயணத்தின் போது நேரடியாக மக்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை நேரடியாக கேட்க திட்டமிடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை விஜய் சந்தித்திருந்தார்.

தற்போது மார்ச் முதல் வாரத்திலேயே சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பது அக்கட்சி நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் நாட்களில் தவெக நிர்வாகிகளின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.. மேலும் தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே இருப்பதால், விஜய் விரைவாக களத்திற்கு வர வேண்டும் என்பதே அக்கட்சியினரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Trending News

Latest News

You May Like