1. Home
  2. தமிழ்நாடு

தன்னை பார்க்க வந்த ஜப்பான் ரசிகர்களை நெகிழ வைத்த தவெக தலைவர்..!

1

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், மாவட்டங்களுக்கான கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் பிஸியாக இருக்கிறார். 234 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 120 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.

இதுவரை 3 கட்டங்களாக 57 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது.

ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல் குமார் ஆகியோர் தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்குப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜயின் பனையூர் அலுவலகத்தில் பொறுப்பாளர்களைச் சந்திக்கும் நிகழ்வின்போது, விஜயின் ரசிகர்கள் சிலர் ஜப்பானிலிருந்து தமிழகம் வந்துள்ளனர்.

பனையூர் அலுவலகத்துக்கு வந்த அவர்களை நேரில் சந்தித்த விஜய், அவர்களுடன் கைகுலுக்கி வரவேற்றார்.

பின்னர் சால்வை அணிவித்து அவர்களைக் கௌரவித்தார். தொடர்ந்து அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.

இதனால் அந்த ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

Trending News

Latest News

You May Like