1. Home
  2. தமிழ்நாடு

நம்பி கையெழுத்திட்ட பெண்மணியை ஏமாற்றி கார் வாங்கிய தவெக நிர்வாகி..!

1

கரூர் மாவட்டம்,  குளித்தலை நகர் பகுதி கலப்பு காலணியை  சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரன் மனைவி சங்கீதா வயது 44. இவர் குளித்தலை அருகே  குப்பாச்சிபட்டியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் குளித்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது. எனது கணவர் டோமினிக் பிரபாகரன் முன்னாள் ராணுவ வீரர்.இவர் கடந்த ஆண்டு சாலை விபத்தில் காலமானார். இவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கினோம். எங்களுக்கு சொந்தமான  பூர்வீக சொத்தை விற்று தருவதாக கூறி குளித்தலை அருகே உள்ள கோட்டைமேடு கடைவீதியில் வசித்து வரும் பழனியப்பன் மகன் ராஜா வயது 40. என்பவர் அறிமுகமானார்.

இதன் மூலம் அவருடன்  பழக்கம் ஏற்பட்ட நிலையில், நான் கார் வாங்க நினைத்தேன் அப்போது அவர் என்னிடம் அவருக்கு தெரிந்தவரை அழைத்து வந்து என்னிடம் ஆவணங்களில் ராஜா கையெழுத்து வாங்கினார்.பின்னர் கார் வாங்கும் முடிவை மாற்றிக் கொண்டேன். இந்நிலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து எனது வீட்டிற்கு வந்தவர்கள், நான் கார் வாங்கியதாகவும் அதற்கான தவணைத் தொகையை கட்ட வேண்டும் என கேட்டனர். அப்போது தான்  ராஜா என்னை ஏமாற்றி எனது பெயரில் கார் வாங்கி தவணைத் தொகையை கட்டாதது தெரிய வந்தது.

இது குறித்து ராஜாவிடம் கேட்ட போது, எனது வீட்டிற்கு வந்த ராஜா என்னை தகாத வார்த்தைகளால் திட்டி,  கொலை மிரட்டல் விடுத்ததாகவும்,எனது பெயரில் மோசடி செய்யும் நோக்கத்தில் எனது கையெழுத்தை பயன்படுத்தி கார் வாங்கி மோசடி செய்த ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி இருந்தார்.புகாரைப்பெற்ற குளித்தலை சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு ராஜாவை கைது செய்தார். கைது செய்யப்பட்ட ராஜா தவெக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை குழு நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Trending News

Latest News

You May Like