தவெக மாநாடு: தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
தவெக மாநாடு நாளை (ஆக.21) மதுரை பாரபத்தியில் நடைபெறவுள்ளது. அதனையொட்டி மதுரை மாவட்டம் எலியார்பத்தி, வலையங்குளம், காரியாப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.