ஜூலை 1 முதல் தட்கல் டிக்கெட் எடுக்க இது கட்டாயம்..! ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி ?

சாமான்ய மக்கள் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வதில் சந்திக்கும் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு, ரயில்வே முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தட்கல் டிக்கெட் முன்பதிவுகளை IRCTC கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.அதாவது, இப்போது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் கூட தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 10 நிமிடங்களில், இந்த சாளரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.
ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் அட்டையை எவ்வாறு இணைப்பது?
1. முதலில், நீங்கள் IRCTC வலைத்தளத்தைத் திறந்து உள்நுழைய வேண்டும்.
2. அடுத்த கட்டத்தில், My Profile சென்று Aadhaar kyc என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இதற்குப் பிறகு நீங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் வெரிஃபை செய்ய வேண்டும்.
4. இந்த வழிமுறையில் உங்கள் ஆதாரை IRCTC கணக்குடன் இணைக்கலாம்.
போலி முன்பதிவைத் தடுப்பதே இந்த முடிவின் நோக்கம். ஐஆர்சிடிசியின் சுமார் 13 கோடி பயனர்களில், 1.2 கோடி பயனர்களின் கணக்கு மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது ரயில்வே மற்ற பயனர்களை விரைவில் தங்கள் ஆதாரை இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறது
சில ஐஆர்சிடிசி ஐடிக்கள் மூலம் தட்கல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தானியங்கி மென்பொருள் பயன்படுத்தப்படுவதை ஐஆர்சிடிசி கண்டறிந்துள்ளது. இதன் மூலம் நொடியில் டிக்கெட் புக் செய்து விடுவதால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் காலியாகி , பல நேரங்களில் சாதாரண மக்களால் டிக்கெட்டுகளைப் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த, மோசடியை தடுக்க, கடந்த 6 மாதங்களில் ரயில்வே 2.4 கோடி போலி கணக்குகளை மூடியுள்ளது. இது தவிர, 20 லட்சம் கணக்குகள் மீதான விசாரணையும் நடந்து வருகிறது.