1. Home
  2. தமிழ்நாடு

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ 1 கோடி - டாடா குழுமம் அறிவிப்பு!

1

242 பேருடன் பயணித்த விமானம் பெரும் தீயுடன் கீழே விழுந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 169 பேர், போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்தவர்கள் 7 பேர், பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 53 பேர், கனடாவைச் சேர்ந்த ஒருவர் இருந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்த விமானம் மெகானி நகர் பிஜே மருத்துவ கல்லூரி விடுதி கட்டிடடத்தின் மீது விழுந்தது. இதனால் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மருத்துவர்கள், மாணவர்கள் ஆகியோரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.விமானத்தில் பயணித்தவர்களில் விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

ஏர் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரான டாடா குழுமம் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவியாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.

“ஏர் இந்தியா விமானம் 171 விபத்துக்குள்ளான துயர சம்பவத்தால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம்.இந்த நேரத்தில் நாங்கள் உணரும் துயரத்தை வார்த்தைகளால் முழுவதுமாக வெளிப்படுத்த முடியாது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடனும், காயமடைந்தவர்களுடனும் உள்ளன.



இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் டாடா குழுமம் ரூ.1 கோடி வழங்கும். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம், மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து பராமரிப்பு மற்றும் ஆதரவும் கிடைப்பதை உறுதி செய்வோம். கூடுதலாக, பிஜே மருத்துவ கல்லூரி விடுதியைக் கட்டுவதற்கு நாங்கள் ஆதரவளிப்போம்” என்று டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து விரைவில் உயிரிழந்தோர், காயமடைந்தோர் குறித்த விவரங்களை விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதைத் தொடர்ந்து மத்திய அரசு உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிவாரணத் தொகையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 


 

Trending News

Latest News

You May Like