1. Home
  2. தமிழ்நாடு

இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்!!

இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்!!


வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாமக்கல் மாவட்டங்களில் மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாமக்கல் மாவட்டங்களில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள மதுக் கூடங்கள் அனைத்தும் வள்ளலார் நினைவு தினமான இன்று மூடி வைக்க வேண்டும்.

இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்!!

இன்று மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமைகளை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுக்கூட உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like