இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது..!
கேரளா, கர்நாடகாவில் ஏப்ரல் 26ஆம் தேதி 2ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளன. இதனையொட்டி, தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கேரளா தேர்தலையொட்டி, குமரி, தேனி, கோவை எல்லை மாவட்டங்களிலும், கர்நாடகா தேர்தலையொட்டி ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய எல்லை மாவட்டங்களிலும் டாஸ்மாக் இயங்காது எனக் கூறப்படுகிறது