நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.!
தமிழகத்தை பொறுத்தவரை 4ஆயிரம் மதுபான கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாளொன்றுக்க 100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் கொடுத்து வருகிறது. விஷேச நாட்களில் ஒரு நாள் வருவாய் 130 முதல் 200 கோடிவரை கிடைக்கிறது.
மேலும் திருவள்ளுவர் தினம், குடியரசுத் தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மேத்தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தியென 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் நாளை அதாவது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மற்றும் ஹோட்டல்களுடன் இணைந்த தனியார் பார்கள் அனைத்தையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறினால் விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.