நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு!!
நாளை அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தினத்தில் மதுபான கடையோ, பார்களோ செயல்படுவதாக தெரிய வந்தால், டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.