1. Home
  2. தமிழ்நாடு

இன்று மற்றும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்..!

1

விக்கிரவாண்டி தகுதியில் நாளை ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது ஜூலை 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பாக அன்னியூர் சிவா வேட்பாளராக களமிறங்குகிறார். அதிமுக தேர்தலை புறக்கணித்துவிட்டது. பாஜக கூட்டணியில் பாமக சார்பாக சி.அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா களமிறங்குகிறார்.சுயேச்சையாக பலர் போட்டியிடுகின்றனர். மொத்தத்தில் 64 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 29 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

ஜூலை 10ஆம் தேதி (புதன்) விழுப்புரம் மாவட்டத்துக்கு பொது விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூன்று நாள்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் ஜூலை 8, 9, 10 மற்றும் ஜூலை 13 ஆகிய 4 நாட்களுக்கு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபானக் கடைகள், தனியார் மதுபானக் கூடங்கள், சொகுசு ஹோட்டல்களில் உள்ள பார்கள் என அனைத்தும் மூடப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “08.07.2024 காலை 10.00 மணி முதல் 10.07.2024 நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 13.07.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 08.07.2024 அன்று காலை 10.00 மணி முதல் 10.07.2024 நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 13.07.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்படுகின்றது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like