இன்று மற்றும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்..!

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அரசியல் தலைவருமான சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு நாள் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது.
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நாளுக்கு பதிலாக வரும் 23ஆம் தேதி அன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் இயங்கும்.
மேலும், இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் வரும் 10, மற்றும் 11 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.