1. Home
  2. தமிழ்நாடு

3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை..!

1

 தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் 8 நாட்கள் விடுமுறையானது விடப்படுகிறது. குறிப்பாக திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி விடுமுறை அளிக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பகுதிகளில் மதுக்கடைகள் மூடப்படுகிறது. மேலும் முக்கிய கோயில் விழாக்கள் நேரத்திலும் மதுக்கடைகள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மூடப்படுகிறது.

அந்த வகையில் 27.10.2024 - மருதுபாண்டியர் நினைவுநாள் விழா மற்றும் 29.10.2024, 30.10.2024 - பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகளாரின் ஜெயந்தி- குருபூஜையினையொட்டி மூன்று தினங்கள் மதுபானக் கடைகள் அடைப்பு என மதுரை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

”27.10.2014 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியர், நினைவுதினத்தை முன்னிட்டும், 29.10.2024, 30.10.2024 ஆகிய நாட்களில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை தினவிழாவை முன்னிட்டும், மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு 27.10.204 (மாலை 07.00 மணி வரை மட்டும்). மற்றும் 29.10.2024, 30.10.2024 ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் மதுரை மாவட்டத்தில் இயங்கிவரும் (FL1/FL2/FL3/FL3A/FL4A/FL11) ஆகிய உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள், படைவீரர்கள் கேண்டீன் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடப்பட்டு இருக்கும். மேற்படி தினங்களில் மது விற்பனை தொடர்பான விதி மீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி தினங்களில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது”.

Trending News

Latest News

You May Like