1. Home
  2. தமிழ்நாடு

இந்த 3 நாட்கள் டாஸ்மாக் கடை மூட உத்தரவு..!

1

ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு வரும் அக்டோபர் 30ஆம் தேதி குருபூஜை நடைபெற உள்ளது. 

இந்த விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமமுக பொதுச் செயலா் டி.டி.வி தினகரன், சமுதாயத் தலைவா்கள், சமுதாய அமைப்பினா், ஆன்மிகவாதிகள், பொதுமக்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்க உள்ளனா்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் வரும் 30ம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற இருப்பதால் எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு கருதி வரும் 28, 29, 30 ஆகிய 3 தினங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடவேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.பொது அமைதி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஏதுவாக 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like