1. Home
  2. தமிழ்நாடு

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு..!

1

கார்த்திகை மாதம் துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிய துவங்கிவிட்டனர். இதனால், மது விற்பனை தமிழகத்தில் சற்று குறைந்திருக்கிறது. இந்நிலையில், பவுர்ணமி தினத்தன்று நவம்பர் 26 ம் தேதி அண்ணாமலைகோயில் உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பல மாவட்டங்களில் இருந்தும் வருவர்.

இதனால், பக்தர்களின் சௌவ்கரியத்திற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் நவ.25 ஆம் தேதி முதல் நவ.27 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை கூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவையும் மீறி டாஸ்மாக் கடைகள் இயங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like