1. Home
  2. தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் செப்டம்பர் முதல்...

1

மது அருந்துபவர்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் இதை தடுக்கும் விதமாக காலி மது பாட்டில்களை மதுக்கடையில் திரும்பப் பெறும் திட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக  ஐகோர்ட்   உத்தரவிட்டது. இந்த திட்டம் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் தற்போது செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருவாரூர், நாகை, தேனி, தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது. 

இந்நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில், காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறுவது தொடர்பான வழக்கு, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஜனவரி மாதம் முதல், திருவாரூர், தருமபுரி, கன்னியகுமாரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மே மாதம் முதல், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில்  அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

Trending News

Latest News

You May Like