டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் லீவு.. எங்கு தெரியுமா ?
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், `கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்தவகையில், திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே அமைந்துள்ள அரசு மதுபான கடை, மணலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடை, புறவழிச் சாலையில் அமைந்துள்ள எலைட் அரசு மதுபான கடை இயங்காது.
திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள ஹோட்டல் திரிசூல் ஹோட்டல் நளா ஹோட்டல், அக் ஷிரேயா ஹோட்டல், அம்மாயி, வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி உள்ளிட்ட கடைகள் வரும் வரும் 25.11.2023 12 மணி முதல் 27.11.2023 இரவு 10 மணி வரை 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.