1. Home
  2. தமிழ்நாடு

3 நாட்கள் டாஸ்மாக் கடை விடுமுறை..!

1

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையில் வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடையையும் போற்றும் வகையில், வருடந்தோறும் ஆடி மாதம் 17, 18 தேதிகளில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதிகளில் கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இந்த விழாவை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி அரசு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த நாளில் எந்தவித அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, “நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், சங்க காலத்தில் வாழ்ந்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத்தன்மையையும் போற்றும் வகையில், தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17, 18 தேதிகளில், கொல்லிமலையில் ஓரிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும், தமிழக அரசின் சார்பில் வரும் ஆக. 2, 3ம் தேதிகளில் கொல்லிமலையில் ஓரி திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கொல்லிமலையில் அரசின் பல்துறை விளக்க கண்காட்சி, சுற்றுலா விழா, மலர்க்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

Trending News

Latest News

You May Like