1. Home
  2. தமிழ்நாடு

டாஸ்மாக்கில் இனி புதிய நடைமுறை! இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..!

1

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பானங்களுக்கு அச்சிடப்பட்ட பில் வழங்கும் நடைமுறை 2 வாரங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

மதுபான விற்பனை மற்றும் பில்லிங்கை வெளிப்படையாக மாற்றவும், ஒழுங்குமுறைப்படுத்தவும், தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் (டாஸ்மாக்), ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் டவுன் பகுதியில் இருக்கும் மொத்தம் 14 டாஸ்மாக் கடைகளில் QR கோடு அடிப்படையிலான பில்லிங் முறையை அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய பில்லிங் முறை ஒரு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. இந்த பில்லிங் முறையில், பாட்டிலில் அச்சிடப்பட்ட QR கோடு விற்பனையாளர்களால் கையடக்க சாதனத்துடன் ஸ்கேன் செய்யப்படும், இது ஒரு பில்லை உருவாக்கும். ஒவ்வொரு பாட்டிலுக்கும் தனி பில்லை உருவாக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே அரக்கோணம் மற்றும் ராமநாதபுரத்தில் இந்த நடைமுறை இருக்கும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விரைவில் அமல்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மதுபானங்களுக்கு கூடுதல் விலை வசூலிக்கப்படுவதாக புகார்கள் உள்ளநிலையில், பில் நடைமுறை வந்தால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என சொல்லப்படுகிறது

Trending News

Latest News

You May Like