1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி வாடிக்கையாளர் சேவை பிரிவில் வேலை - 124 காலிப்பணியிடங்கள்..!

1

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் சீனியர் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பதவிக்கு 31.01.2025 தேதியின்படி, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனுபவம் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 31.01.2025 தேதியின்படி, அதிகபடியாக 30 வயதைக் கடந்திருக்கக்கூடாது.

சம்பள விவரம்
இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.72,061 சம்பளமாக வழங்கப்படும். வருடத்திற்கு ரூ.8.64 லட்சம் வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்கள் விண்ணப்பிக்க நபர்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 150 மதிப்பெண்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். இரண்டு தேர்வுகளுக்கும் ஆங்கிலத்தில் நடத்தப்படும். அந்தந்த மாநிலங்களில் இதற்கான தேர்வு மையம் அமைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்    16.03.2025
 

Trending News

Latest News

You May Like