ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை..!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட தமிழிசை சௌந்தரராஜன் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் புதுச்சேரி, தெலங்கானா ஆளுநர பதவியை இன்று ராஜினாமா செய்கிறார்.
2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தமிழிசை சவுந்தரராஜன் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. தென் சென்னையில் அவர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுநர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்யவுள்ளதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.