1. Home
  2. தமிழ்நாடு

ஸ்டிக்கர் ஸ்டாலின் என தமிழிசை சவுந்தரராஜன் கேலி..!

1

 கடலூரில் தமிழ்நாடு மாநில பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகத்தின் 7வது மண்டல மாநாடு நடைபெற்றது.

"பெற்றோர்களை கொண்டாடுவோம்" என்ற விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அப்பா என்ற புதிய செயலியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

அப்போது பேசிய முதல் அமைச்சர்," அம்மா, அப்பா, ஆசிரியர் தெய்வம் என்று கூறுவா். கல்வி துறையில் உலகத்தரம் வாய்ந்த சாதனைகள் படைக்கப்படுகிறது. தமிழக அரசு செய்வது அனைத்துமே சாதனைகள் தான். மாணவர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டின் சொத்துக்கள். அந்த நினைப்போடு தான் அவர்களை வளர்க்கிறோம்" என்றார்.

ஏற்கனவே அப்பா என்று தன்னை பள்ளி மாணவர்கள் அழைத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடுமையாக கொச்சைப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அப்பா செயலியை அறிமுகம் செய்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஸ்டிக்கர் ஸ்டாலின் என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்," அப்பா என்ற அழையுங்கள்... அம்மா என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களைப் பார்த்து ஸ்டிக்கர்
முதலமைச்சர் மருந்தகங்கள்...
பிரதமர் மோடி அவர்களின்.. பிரதமர் மருந்தகங்களை பார்த்து. ...ஸ்டிக்கர்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
என்ற. திரு எம் ஜி ஆர் அவர்களின். பாடலைப் பாடி திரு எம் ஜி ஆர் அவர்களைப் பார்த்து ஸ்டிக்கர் ...
#ஸ்டிக்கர் ஸ்டாலின்" என பதிவிட்டு உள்ளார்.


 

Trending News

Latest News

You May Like