சென்னையில் தமிழிசை கைது..!

தமிழக பா.ஜ., சார்பில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற கையெழுத்து இயக்கம் துவக்க நிகழ்ச்சி, சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்தது. இதை, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் துவக்கி வைத்தார்.
இணையதளம் வாயிலாக ஆதரவு தெரிவிக்க, 'புதிய கல்வி' என்ற இணையதளத்தை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 06) சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கிய பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கைது செய்யப்பட்டார்.
அப்போது போலீசாருக்கும் பா.ஜ.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அனுமதி பெறாமல் கையெழுத்து இயக்கம் துவங்கி உள்ளதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த போது தமிழிசை கூறியதாவது:
சாமானிய மக்களிடமே கையெழுத்து வாங்குகிறோம். இதற்கு போலீசார் ஒத்துழைக்க வேண்டும். என்னை ஏன் தீவிரவாதி போல போலீசார் சுற்றி உள்ளனர் என்பது எனக்கு புரியவில்லை, என்றார்.