1. Home
  2. தமிழ்நாடு

தமிழிசை அட்வைஸ் : தம்பி விஜய் பாஜகவை விமர்சிக்க வேண்டாம்..!

1

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “தமிழக வெற்றிக் கழகத்தின் முகவர்கள் மாநாடு நடந்துள்ளது. விஜய் களத்தில் இறங்கி வந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. வொர்க் ப்ரம் ஹோமில் இல்லாமல் களத்திற்கு வந்தது மகிழ்ச்சியான செய்தி. ஏனெனில் ஒரு அரசியல் கட்சி களத்திற்கு வந்து மற்ற அரசியல் கட்சிகளை சந்திக்க வேண்டும்.

ஆளும் திமுகவை விஜய் இன்னும் கடுமையாக எதிர்க்க வேண்டும். தவெகவின் முதல் எதிரி திமுகவாகத்தான் இருக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை. தம்பி விஜய்க்கு இன்னொரு வேண்டுகோள். இந்தியாவை பலம் பொருந்திய கட்சியாக பாஜக ஆண்டு வருகிறது. ஆகவே, சம்பிரதாயத்துக்காக பாஜகவை விமர்சிக்க வேண்டும் என்று நினைக்காமல், முழு எதிர்ப்பையும் திமுக கூட்டணி மீது காட்ட வேண்டும்” என்று தெரிவித்தார்.


தொடர்ந்து, “எந்த அமைச்சர் மீது வழக்கு இருக்கிறது என்று கேட்பதற்கு பதிலாக, எந்த அமைச்சர் மீது வழக்கு இல்லை என்று கேட்கும் அளவுக்கே திமுகவின் நிலை உள்ளது. இனி மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவைக் கூட்டத்தை சிறையிலோ அல்லது நீதிமன்றத்திலோ வைக்க வேண்டிய நிலை வந்துள்ளது.


ஆனால், எங்கள் கூட்டணியை பார்த்து கூடா நட்பு என்று திமுக சொல்கிறது. ஆனால், பாஜகவோடு திமுகவும் கூட்டணி வைத்துள்ளது. எங்கள் நட்பு மக்களுக்கு நல்லது செய்கின்ற கூட்டணி நட்புதான். 2026ஆம் ஆண்டு களம் எங்களுக்கானது. மத்தியில் ஆளும் பாஜகவும், இதற்கு முன்பு தமிழகத்தை சிறப்பாக ஆண்ட அதிமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம்.


அதேபோல பெண்களைப் பற்றி தவறாக பேசுபவர்களை திமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்றால் பலரையும் நீக்க வேண்டும். ஆகவே, கனிமொழி சமுதாயத்திற்கு பாடம் எடுப்பதை விடுத்து, திமுகவினருக்கு பாடம் எடுப்பது நல்லது. பொது வெளியில் மட்டுமின்றி இணைய தளத்தில் கூட மிக மோசமாக திமுகவினர் எழுதுகிறார்கள். ஆகவே, கனிமொழி முதலில் அவர்களை கண்டிக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like