1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது !

A

 மத்திய அரசின் சார்பில், இந்தியாவின், 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகளை வழங்குகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருதுகள், 24 இந்திய மொழிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மமங் தயின் ஆங்கில மூலமான தி பிளாக் ஹில் நாவலை, தமிழில் ‘கருங்குன்றம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்த எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணையன் தட்சிணாமூர்த்தி 20க்கும் மேற்பட்ட பிறமொழி நூல்களை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆங்கிலத்தில் வெளியான தி பிளாக் ஹில் நாவல் 2017ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like