1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் எழுந்த தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை... இந்த முறை உதயநிதி பங்கேற்ற விழாவில்...

1

திட்டம் மற்றும் செயலாக்கத் துறை சார்பில்  இன்று காலை ஆலோசனை நடத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். தமிழக அரசின் விழாக்கள், துறை சார்ந்த ஆலோசனை கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது என முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த நிகழ்விலும் பாடப்பட்டது.

இந்த அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது. கண்டமிதில் என்பதை கண்டமதில் என்று பாடிய செய்தித்துறை அலுவலர்கள், தவறு நடந்தது தெரிந்ததும் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். 2வது முறை பாடும்போது புகழ் மணக்க என்பதை திகழ் மனக்க என்று பாடியுள்ளனர். முன்னதாக ஆளுநர் ரவி பங்கேற்ற விழாவில் 'திராவிட நல் திருநாடும்' வரி விடுப்பட்டது பெரும் சர்ச்சையானது.

இந்த நிலையில்தான் கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில் தமிழ்த் தாய் வாழ்த்தை யாரும் தவறாக பாடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது திடீரென மைக்கில் கோளாறு ஏற்பட்டு யாருக்கும் கேட்காமல் போய்விட்டது. அதனால்தான் அவர்களை மீண்டும் பாட வைத்தோமே தவிர, அவர்கள் தவறாக பாடினார்கள் என்பதற்காக அல்ல என விளக்கி அந்த சர்ச்சைக்கு உதயநிதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like