1. Home
  2. தமிழ்நாடு

இமாச்சல பிரதேச சகோதர, சகோதரிகளுக்கு தமிழ்நாடு துணை நிற்கும்! - மு.க.ஸ்டாலின் ட்வீட்!

1

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து 22 உயிர்கள் பறிபோன நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்கு பொதுமக்கள் வீடுகளிலேயே பத்திரமாக இருக்குமாறு முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூன் 1 ஆம் தேதி தொடங்கிய தென் மேற்கு பருவமழை காலத்திலிருந்து இதுவரை டெல்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மாவட்டங்களில் தலா 112%, 100%, 70% அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

மலைப் பிரதேசமான இமாச்சல பிரதேசத்தில் சிம்லா, குலு, மண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் நேற்று மட்டும் 13 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 9 இடங்களில் காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள், உடைமைகள் அடித்துச் செல்லப்பட்டன. சிம்லாவில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். குலு, சம்பா பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் என மொத்தம் இதுவரை மாநிலத்தில் மழை, வெள்ள, நிலச்சரிவு பாதிப்புகளில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர்.

இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டாற்று வெள்ளத்தில் வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கனமழை தொடர்வதால் இமாச்சல பிரதேசத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல பிரதேசத்லுக்கு தமிழக அரசு உதவும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய டுவீட்டரில் கூறி இருப்பதாவது;

"இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் பருவ மழையின் பேரழிவு தாக்கம் கவலையளிக்கிறது. இமாச்சல பிரதேசத்திற்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும். இமாச்சல பிரதேச சகோதர, சகோதரிகளுக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 


 


 

Trending News

Latest News

You May Like