1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை தான் கடைபிடிக்கும்... அதில் எந்த மாற்றமும் கிடையாது - எடப்பாடி பழனிசாமி..!

1

அதிமுகவின் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் லட்சிய மாநாடு வேலூரில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல் அமைச்சரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது," 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான வலிமையான வெற்றிக் கூட்டணி அமையும். கூட்டணிக்காக நாங்கள் யாரையும் நாடி செல்வது கிடையாது.

எங்களை நாடிதான் மற்றவர்கள் வருவார்கள். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை தர மறுக்கும் மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். தேசிய கல்விக் கொள்கையை கடைபிடித்தால் தான் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படும் எனக்கூறுவது சரியல்ல. மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என நிர்பந்திப்பதும் சரியல்ல. தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை தான் கடைபிடிக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது" என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Trending News

Latest News

You May Like