1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்..!

1

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிபடியாக உருமாறி இன்று புயலாக வலுப்பெற்றுள்ளது. நாளை சென்னை உட்பட வட தமிழகத்தை நெருங்கும் இந்த புயல் நாளை மறுநாள் ஆந்திராவின் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளது.

இந்த புயலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிகைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழை பெய்யும் என்பதால் தமிழக அரசு இந்த 4 மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. மக்கள் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் குறித்து அப்டேட்டுகளை வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த புயல் குறித்த பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,சென்னையில் இனிமேல்தான் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என பதிவிட்டுள்ளார். ஆகவே மக்கள் யாரும் தேவையின்றி வெளியே செல்வது தவிர்க்க வேண்டும்  


 


 

Trending News

Latest News

You May Like