1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன ஷாக்கிங் நியூஸ்..! மழை சீசன்லாம் முடிஞ்சிருச்சி.. இனி "வெயிலோடு ஆட்டம் ஆரம்பம்..!

1

கடந்த சில வாரங்களாக பெய்து வந்த மழை கோடை வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றியது.  இது ஒருபுறம் இருக்க, கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழையால், தென் மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.

இந்த சூழலில், வங்கக்கடலில் ரெமல் என்ற புயல் உருவாகியதால், தமிழகத்திற்கு மேலும் மழை கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த புயலால் தமிழகத்திற்கு மழை கிடைக்காது என்பதோடு, பெய்யப் போகும் மழையையும் இந்த புயல் கெடுத்து விட்டிருக்கிறது. வடகிழக்கு திசையை நோக்கி நகரும் இந்த புயல், இன்று இரவு வங்கதேசத்தில் கரையை கடக்கிறது. அதனால் இந்த புயல் காற்றானது தமிழகத்தில் உள்ள மழை மேகங்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டு சென்றுவிட்டதால் இனி மழை பெய்யாது என வானிலை மையமும் தெரிவித்துள்ளது.     

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், "ஊமை வெயிலை அடுத்து, வடக்கில் இருந்து நிலப்பகுதியை நோக்கி மழை மேகங்கள் நகர்கின்றன. வட சென்னையில் மழை பெய்கிறது. ஆனால், சென்னையின் பிற பகுதிகளில் பெரிய அளவில் மழை இல்லை. மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு புயல் நகர்ந்த பின்னர் தமிழகத்தில் மிகவும் வறண்ட வானிலையே நிலவும். மே 27 முதல் KTCC எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 41 - 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் முழுவதும் சென்னையில் 40 டிகிரி செல்சியஸை வெயில் கடக்கவில்லை. ஆனால், இந்த மாத இறுதியில் அதற்கான வாய்ப்பு இருக்கிறது.அதே சமயத்தில், கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, வால்பாறை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இயல்பை போலவே இருக்கும். வட இந்தியாவில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து இருக்கிறது. ராஜஸ்தானில் வெயில் 50 டிகிரி செல்சியஸை (120 டிகிரி ஃபாரன்ஹீட்) கடக்க போகிறது" என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like