1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு வெதர்மேன் போட்ட பதிவு : பந்தலூர் பகுதியில் இடைவிடாமல் வரலாறு காணாத மழை..!

1

 தமிழகத்தல் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.தமிழகத்தை ஒட்டிய கேரள பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்திலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்த வானிலையே மாறியுள்ளது.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் இன்னும் மேகங்கள் (இரவு 9 மணி நிலவரப்படியே) காணப்படுகின்றன. தமிழகத்தில் இந்தஇடம் மற்றும் மாஞ்சோலையை தவிர வேறு எங்கும் மழை இல்லை.. பந்தலூரில் பெய்துவரும் மழை மிகவும் வித்தியாசமானது. பல மணிநேரமாக பெய்து வருகிறது. கேரளாவில் கூட இந்த அளவிற்கு மழை பெய்யவில்லை.. 200 முதல் 300 மில்லி மீட்டர் மழை பெய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் வெதர்மேன் பிரதீப்ஜான் இரவு 10 மணிக்கு மேல் வெளியிட்ட மற்றொரு பதிவில், பந்தலூரில் இதுக்கு எண்டே இல்லை போல, புதிதாக மேகக்கூட்டங்கள் நகர்ந்து செல்கின்றன என்று கூறியிருந்தார். நீலகிரி மாவட்டம் முழுவதுமே மழை பெய்து வரும் காரணத்தால், மக்கள் சாலைகளில் இரவில் செல்வது ஆபத்தானது என்கிறார்கள் மக்கள். குறிப்பாக பந்தலூர் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

வானிலை மையம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பின் படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 11 செ.மீ. மழை பெய்துள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 8 செ.மீ., மேல் பவானியில் 7 செ.மீ. பெய்துள்ளது.

Trending News

Latest News

You May Like