1. Home
  2. தமிழ்நாடு

ஷாக்கிங் நியூஸ் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்..! மீண்டும் வெப்பநிலை அதிகரிக்குமாம்..!

1

தமிழ்நாட்டை வெயில் பொசுக்கி வந்த நிலையில், தற்போது மழை பிரித்து மேய்ந்து வருகிறது. நடைபெறுவது கோடைக்காலமா அல்லது பருவமழை காலமா என்று கேட்கும் அளவுக்கு கடந்த சில வாரங்களாக வானிலை மாறத் தொடங்கி இருக்கிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல பகுதிகளில் கனமழையும், சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிலும், கோடை மழை ஆரம்பித்தது முதலாகவே மதுரை மிதந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு அடுத்ததாக, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் பேய் மழை பெய்து வருகிறது.

இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருச்சி, மதுரை, கரூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருச்சி, கரூர், சேலத்தில் நேற்று மழை விளாசி தள்ளியது. அதிகபட்சமாக, கரூரில் 100 மி.மீ.க்கு மேல் மழை பதிவானது.

அதேபோல, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பரவலாக கனமழை பெய்தது. இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும், ஒரு கெட்ட செய்தியையும் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"திருச்சி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், கரூர், தர்மபுரி, வால்பாறை ஆகிய இடங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. கேடிசிசி எனப்படும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் காலை வரை நல்ல மழை பெய்தது. கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் இதுபோன்ற வானிலைதான் நிலவி வருகிறது.

சென்னையில் வரும் 23-ம் தேதி வரை 2 நாட்களுக்கு இதே நிலை தொடரும். அடுத்த 2 நாட்களும் சென்னை மக்கள் இதுபோன்ற மழையில் ஜாலியாக இருக்கலாம். ஆனால் அதன் பிறகு சென்னையில் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும். இந்த மே மாதத்தில் சென்னையில் ஒரு நாள் கூட 40 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்" என அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like