1. Home
  2. தமிழ்நாடு

வரும் 30 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் : தமிழக வாழ்வுரிமை கட்சி..!

1

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எதிர்வரும் 30-9-2023, சனிக்கிழமையன்று மாலை 2 மணியளவில் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான காவிரியில் உச்சநீதிமன்ற ஆணையிட்டும், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு உரிமையான நீரை திறந்து விட மறுப்பதோடு கன்னட இனவெறிக் கும்பல்களை தூண்டி விட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் உருவப்படத்தை பல்வேறு வகைகளில் அவமதிக்கும் செயல்களில் ஈடுபடும் கர்நாடக அரசை கண்டித்தும் அதற்கு துணை போகின்ற ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் ஆளுநர் மாளிகை நோக்கிய பேரணியும், ஆளுநர் மாளிகை முற்றுகையும் நடைபெற இருக்கிறது,எனவே தாய்த்தமிழ் நாட்டின் அனைத்து உறவுகளும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து தோழர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like