1. Home
  2. தமிழ்நாடு

நீட் தேர்வில் கலக்கிய தமிழக மாணவர்கள் ஸ்ரீஜன்,மோகன பிரபா !!

நீட் தேர்வில் கலக்கிய தமிழக மாணவர்கள் ஸ்ரீஜன்,மோகன பிரபா !!


இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வில், 720க்கு 710 மதிப்பெண் பெற்று திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவிலைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

நாமக்கல் தனியார் பயிற்சி மையத்தில் படித்த அந்த மாணவர், இந்திய அளவில் 8 வது இடத்திலும் ஓ.பி.சி பிரிவில் இந்திய அளவில் முதலிடமும் பிடித்துள்ளார்.இதேபோல் நாமக்கல்லை சேர்ந்த மாணவி மோகன பிரபா 705 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடமும், தேசிய அளவில் 52 வது இடமும் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 48.57 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 57.44 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. ஒடிசாவை சேர்ந்த சோயப் அக்தப் என்ற மாணவர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like